தெலுங்கானா அனாதை இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! பணத்திற்கு ஆசைப்பட்டு வார்டன் வெறிச்செயல்..!

9 August 2020, 10:11 pm
Minor_Rape_UpdateNews360
Quick Share

தெலுங்கானாவில் அனாதை இல்லத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேட்சல் மாவட்டத்தில் மாருதி அனாதை இல்லத்தில் வசிக்கும் சிறுமி, மயக்க மருந்துகளுடன் கூடிய குளிர்பானங்களை குடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்துள்ளது.

பாதிப்பிற்குள்ளான சிறுமியின் அறிக்கையின் அடிப்படையில், சங்கரெட்டி மாவட்டத்தின் கீழ் அமீன்பூர் போலீசார்,அனாதை இல்லத்திற்கு நன்கொடை அளித்தவரும், ரெட்டி லேப்ஸில் பணியாற்றிய ஊழியருமான 51 வயதான நரேட்லா வேணுகோபால் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். மாருதி அனாதை இல்லத்தின் உரிமையாளரும் ஹாஸ்டலின் வார்டனான சியெல்குரி விஜயா மற்றும் அவரது சகோதரர் சூரபனேனி ஜெயதீப் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சிறுமி நிலோபர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் (சி.சி.ஐ) வசித்து வந்த 50 சிறுமிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேட்சல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 130 சி.சி.ஐ.களில் மாருதி அனாதை இல்லமும் ஒன்றாகும்.

சிறுமி 2015’ஆம் ஆண்டில் தனது மாமாவால் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார் மற்றும் 2019’ஆம் ஆண்டில் துஷ்பிரயோகம் தொடங்கியது என்று கூறப்படுகிறது. விடுதி வார்டன் விஜயா, வேணுகோபாலுடன் அனாதை இல்லத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு தனி அறைக்குச் செல்லுமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சிறுமி காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், வேணுகோபால் சிறுமியை மயக்க மருந்துகளுடன் கூடிய சாறு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் இந்த சம்பவத்தை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வார்டனால் என்று மிரட்டப்பட்டார். இந்த துஷ்பிரயோகம் பல முறை தொடர்ந்துள்ளது.

வேணுகோபால், வார்டன் விஜயா மற்றும் அவரது சகோதரருக்கு பல முறை பணம் கொடுப்பதைக் கண்டதாக சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். அனாதை இல்லத்தில் மற்றொரு சிறுமிக்கும் மீது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை நடந்ததாக அங்குள்ள பல சிறுமிகள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சிறுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து சங்கரெட்டி போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 4

0

0