அபாரம்..! 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள்…! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய தகவல்

7 August 2020, 10:41 am
UpdateNews360_ICMR
Quick Share

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை நேற்றுடன் 19.64 லட்சமாக கடந்துவிட்டது.

56,282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட, இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் பலியாகி உள்ளனர். அதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில் 2 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.  நேற்று மட்டும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 783 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. வருங்காலங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தும் வகையில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

Views: - 40

0

0