மூன்று நாட்களில் 262 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..! பெற்றோர்கள் ஷாக்..!

5 November 2020, 4:06 pm
schools_coronavirus_updatenews360
Quick Share

ஆந்திராவில் 9’ஆம் வகுப்பு மற்றும் 10’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2’ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், கடந்த மூன்று நாட்களில் 262 மாணவர்களும் சுமார் 160 ஆசிரியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பள்ளி கல்வியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு பள்ளியிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஆபத்தானது அல்ல என்று பள்ளி கல்வி ஆணையர் வி.சின்ன வீரபத்ருது தெரிவித்தார்.

“நேற்று சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் பயின்றனர். 262 கொரோனா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது 0.1 சதவீதம் கூட இல்லை. பள்ளிகளுக்கு அவர்கள் வருவதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்வது சரியானதல்ல. ஒவ்வொரு பள்ளி அறைகளிலும் 15 அல்லது 16 மாணவர்கள் மட்டுமே இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறை வழங்கிய புள்ளி விபரங்களின்படிடி, மாநிலத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 9.75 லட்சம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3.93 லட்சம் பேர் வகுப்புகளில் கலந்து கொண்டனர். 1.11 லட்சம் ஆசிரியர்களில் 99,000’த்துக்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு வந்துள்ளனர்.

1.11 லட்சம் ஆசிரியர்களில், சுமார் 160 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் வாழ்க்கையும் எங்களுக்கு முக்கியம் என்று சின்ன வீரபத்ருது கூறினார்.

அரசாங்கத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸைப் பற்றி பெற்றோர்கள் இன்னும் பயப்படுவதால், பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை சுமார் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது என அவர் மேலும் கூறினார்.

பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத ஏழை மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் சிக்கலானது என்றும், பதின்வயதினர் பள்ளிகளுக்கு செல்வதை நிறுத்தினால் பெற்றோர்கள் குழந்தை திருமணங்களில் ஈடுபடக்கூடும் என்றும் வீரபத்ருது கூறினார்.

ஆந்திராவில் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் 9, 10 மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. 9 மற்றும் 10’ஆம் வகுப்புகள் மற்றும் இடைநிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாற்று நாட்களில் அரை நாள் மட்டுமே செயல்படும். மேலும் 6, 7 மற்றும் 8 வகுப்புகள் நவம்பர் 23’ஆம் தேதியிலும், 1, 2, 3, 4 மற்றும் 5 வகுப்புகள் டிசம்பர் 14 முதல் தொடங்கும் என்று ஆந்திர அரசு வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது பள்ளிகளைத் திறந்துள்ளதால் கொரோனா தொற்று பன்மடங்காக பெருகி வருவதால், திட்டமிட்டபடி இதர வகுப்புகள் தொடங்கப்படுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Views: - 15

0

0