காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

8 July 2021, 8:21 am
Quick Share

ஜம்மு: காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பூசல் பகுதியில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், காலையில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

Jammu_Kashmir_Encounter_UpdateNews360

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் மொத்த பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து என்கவுண்ட்டர் நடத்தப்பட்டு வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் கூறும்போது, காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

படையினருக்கு பாதிப்பு எதுவுமின்றி செயல்பட்டு என்கவுண்ட்டரில் ஈடுபட்ட போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், புல்வாமாவின் பூசல் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Views: - 160

0

0