ஆந்திராவில் சினிமா பாணியில் செம்மரக் கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த போலீசார் : 6 பேர் கைது!!

1 February 2021, 7:49 pm
Andhra Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்,.

சினிமா பட பாணியில் மாநில எல்கை வரை துரத்திச் சென்று பிடித்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்த முயன்றபோது வாகனம் நிற்காமல் நேராக சென்றது. இதனைத்தொடர்ந்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை தொடர்ந்து துரத்தி சென்றனர்.

60 கிலோமீட்டர் வரை துரத்தி செல்லப்பட்டு கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மேலும் இந்த வாகனத்திற்கு உதவியாக வந்த வாகனம் ஆகியவற்றை சோதனை செய்ததில் ஒரு வாகனத்தில் 14 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

காரில் பயணித்த 6 பேர் மற்றும் இரண்டு கார்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார் என மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி பகுதியை சேர்ந்த இரண்டு பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 19

0

0