கூலித்தொழிலாளி TO இன்ஸ்டா மாடல்: இணையத்தை கலக்கும் மம்மிக்காவின் சுவாரஸ்ய பின்னணி..!!

Author: Aarthi Sivakumar
15 February 2022, 6:25 pm
Quick Share

கேரளா: கூலித்தொழிலாளியாக இருந்த 60 வயது முதியவர் தற்போது மாடலாக இன்ஸ்டாகிராமில் வலம் வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணக்காடு, கொடிவள்ளியை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் தனது அன்றாட தேவையை பூர்த்தி செய்ய கூலித்தொழில் செய்து வருகிறார். பொதுவாக லுங்கியும் சட்டையும் அணிவது தான் இவரது வழக்கம்.

வழக்கம்போல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் இவரைப் பார்த்துள்ளார். மேலும், இவரை சில புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். மேலும் தான் வைத்துள்ள போட்டோ கம்பெனிக்கு ஒரு மாடலிங் செய்யவும் மம்மிக்காவை கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஷரீக்கின் கோரிக்கையை ஏற்ற மம்மிக்கா மாடலிங் செய்துள்ளார்.

இதையடுத்து, மம்மிக்காவுக்கு முடி திருத்தம், பேஷியல், கோட் சூட், கூலர்ஸ் எனக் கூலாக ஐபேடுடன் லேப்டாப்புடன் மம்மிக்கா கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழுக்கு சட்டையுடனும், லுங்கியுடனும் இருந்த அவரை முழுவதுமாக மாற்றியுள்ளார் ஷ்ரீக். கோட் – சூட், கண்ணாடி, புது ஹேர் ஸ்டைல் என மம்மிக்காவை ஒட்டுமொத்தமாக மாற்றிய ஷரீக் போட்டோ ஷூட் நடத்தியதுடன், அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த இருந்த மம்மிக்காவின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த போட்டோகிராபர், பின்பு மாடலிங் தொடர்பாக எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது, திரும்பும் பக்கமெல்லாம் மம்மிக்காவின் அசத்தல் லுக்தான் ஆக்கிரமித்துள்ளது.

Views: - 346

1

0