இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!!!

By: Aarthi
8 October 2020, 8:49 am
Quick Share

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமான படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

விமான படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

88 வருட அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமான படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளம் ஆக இருக்கிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்து உள்ளார்.

Views: - 44

0

0