பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் : முதலமைச்சர் அறிவிப்பு!

17 July 2021, 9:04 am
Kerala Curfew - Updatenews360
Quick Share

கேரளா : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. பலி எண்ணிக்கையும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தொற்று குறைந்து வருகிறது.

நாட்டில் கேராளாவில் மட்டும் கொரோனா எண்ணிக்கை குறையாமல் இருந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் நசருதீன் தலைமையில் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:- கேரளாவில் அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தற்போது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளுடன் துணிக்கடைகள், செருப்பு, நகை கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Views: - 127

0

0