அயோத்தியை அடுத்து மதுரா..! புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ள கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு..!

26 September 2020, 7:04 pm
Krishna_Janam_Bhoomi_UpdateNews360
Quick Share

அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, மதுரா நகரத்தில் உள்ள முழு கிருஷ்ண ஜன்மபூமியையும் மீட்டெடுக்க மதுரா சிவில் நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமரின் அயோத்தியைப் போல் கிருஷ்ணரின் மதுராவும் இந்து சமூகத்திருக்கு புனிதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வக்கீல்கள் ஹரிசங்கர் மற்றும் விஷ்ணு ஜெயின் ஆகியோர் வாதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான் சார்பாக உள்ளூர் மதுரா நீதிமன்றத்தில் 13.37 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி நிலத்தில் உரிமை கோரி, கோவிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் ஒப்புதலுடன் மசூதி குழு எழுப்பிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத சூப்பர் ஸ்ட்ரக்சர் ஆகியவற்றை நீக்க முயல்கிறது. எனினும், 1991’ஆம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது 1947’க்குப் பிந்தைய சமய வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றுவது தொடர்பாக வழக்குத் தொடர நீதிமன்றங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“கி.பி 1658-1707 வரை அவுரங்கசீப் நாட்டை ஆட்சி செய்தார் என்பது உண்மை மற்றும் வரலாறு மற்றும் அவர் இஸ்லாத்தின் தீவிர பின்பற்றுபவர் என்பதால் ஏராளமான பிற இந்து மத இடங்களையும், கோவில்களையும் இடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். கி.பி 1669-70 ஆம் ஆண்டில் மதுராவின் கத்ரா கேசவ் தேவ் நகரில் ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலும் இடிக்கப்பட்டது.” என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.

“ஒளரங்கசீப்பின் இராணுவம் ஓரளவுக்கு கேசவ் தேவ் கோயிலை இடிக்க முடிந்தது. மேலும் அத்துமீறி அங்கு வேறு ஒரு கட்டுமானம் பலவந்தமாக எழுப்பப்பட்டது. மேலும் கட்டுமானத்திற்கு இட்கா மசூதி என்று பெயரிடப்பட்டது.” என்று அது மேலும் கூறியது.

இது குறித்து பதிலளித்த பாஜக தலைவர் வினய் கட்டியார், அயோத்தியில் ராம் ஜன்மபூமிக்குப் பிறகு மதுராவையும் காசியையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “தேவைப்பட்டால் இட்கா ஆக்கிரமிப்பை அகற்றி கிருஷ்ணா ஜன்மபூமியை மீட்டெடுக்க ஒரு இயக்கம் தொடங்கப்படும்.” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ஹாஜி மெஹபூப் சிவில் வழக்கை அபத்தமானது என்று கூறி, ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கைத் தவிர, உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக எந்தவொரு வழக்கையும் எனக் குறிப்பிட்டார்.

“ராமர் கோவில்-பாபர் மசூதி வழக்கைத் தவிர, காசி, மதுரா அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்ய யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான வார்த்தைகளில் கூறியுள்ளதால் இது அபத்தமானது. அவர்கள் தலையிட மாட்டார்கள் என்று அரசாங்கமே கூறியுள்ளது.” என்று அவர் கூறினார்.