லவ் ஜிகாத்துக்கு எதிராக சிறப்பு சட்டம்..! உ.பி., ஹரியானவைத் தொடர்ந்து மத்திய பிரதேசமும் அதிரடி முடிவு..!

3 November 2020, 1:14 pm
shivraj_singh_chouhan_updatenews360
Quick Share

மாநிலத்தில் செயல்பட்டு வரும் லவ் ஜிகாத் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்தியப் பிரதேச அரசு உரிய சட்ட ஏற்பாடுகளைச் செய்யும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இதன் மூலம், மத்திய பிரதேசம் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்ட விதிகளை உருவாக்கும் நோக்கத்தை அறிவிக்கும் மூன்றாவது பாஜக ஆளும் மாநிலமாக மாறியுள்ளது.

முன்னதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர்.

“அன்பின் பெயரில் ஜிகாத் இருக்காது. அத்தகைய செயலை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.” என்று சவுகான் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநில பாஜக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார்.

லவ் ஜிகாத் என்பது முஸ்லீம்கள் இந்து பெண்களை காதல் என்ற போர்வையில் கட்டாயமாக மதம் மாற்றுவதை குறிக்கும் ஒரு சொல்லாகும்.

முன்னதாக சனிக்கிழமை, யோகி ஆதித்யநாத் தனது அரசாங்கம் லவ் ஜிகாத்தை சமாளிக்க ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக கூறியிருந்தார். ஒரு நாள் கழித்து, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த தனது அரசாங்கமும் அதற்கு எதிரான சட்ட விதிகளை பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0