இதோ வந்துட்டாரு… ஆக்ரா தேர்தல் மன்னன்… 94-வது முறையாக வேட்புமனு தாக்கல்

Author: Udhayakumar Raman
14 January 2022, 11:37 pm
Quick Share

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 75 வயதான முன்னாள் வருவாய்த்துறை ஊழியர் தனது 94வது தேர்தலில் போட்டியிடத் தயாராகி, ஆக்ரா ஊரகப்பகுதி மற்றும் கேராகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆக்ராவைச் சேர்ந்த முன்னாள் வருவாய்த் துறை எழுத்தரான ஹஸ்னுராம் அம்பேத்காரி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஏற்கனவே இதுவரை 93 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

இதுகுறித்து ஹஸ்னுராம் அம்பேத்காரி கூறுகையில், “1985ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டதாகவும், இதுவரை 93 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாக அவர் தொவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 1985 ஆம் ஆண்டு ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் ஒரு அரசியல் சட்சி சார்பில் போட்டியிட வழங்கப்படும் என்று அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி அவர் பணிபுரிந்து வந்த கிளார்க் வேலையையும் அம்பேத்காரி ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் தேர்தல் வந்த போது, அந்த ​​​​கட்சி அவருக்கு சீட்டு கொடுக்க மறுத்து, அதற்கு பதிலாக அவரை கேலி செய்துள்ளது. அதன் பின்னர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்திற்கு ஃபதேபூர் சிக்ரியில் இருந்து தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் கண்டுள்ளார். அதன்பின்னர் கிராம தலைவர், மாநில சட்டசபை, கிராம பஞ்சாயத்து, சட்ட மேலவை, மக்களவை என எந்த தேர்தலையும் விட்டு வைக்காமல் போட்டியிட்டிருக்கிறார்.

ஒருமுறை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கும் விண்ணப்பிக்க சென்றார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. 75 வயது நிரம்பிய ஹஸ்னுராம் அம்பேத்காரி, இந்த முறை ஆக்ரா ஊரகப்பகுதி மற்றும் கேராகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை போட்டியிட்ட 93 தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார். இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் 100வது தேர்தல் வரை போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார்.

UP Panchayat polls: 74-year-old Ambedkar follower in fray for 93rd time -  India News

Views: - 190

0

0