மத்திய ஆயுதப்படை போலீசாருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்..! அமித் ஷா தொடங்கிவைத்தார்..!

23 January 2021, 9:42 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆயுஷ்மான் சிஏபிஎஃப் எனும் திட்டத்தை மத்திய ஆயுதப்படை போலீசாரின் நலனுக்காக அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் மத்திய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள் நாட்டின் அனைத்து ஆயுதமேந்திய போலீஸ் படைகளின் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அசாம் சென்றடைந்தார். அங்கு ஏழு மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) வீரர்களுக்கு அமித் ஷா ஆயுஷ்மான் சிஏபிஎஃப் சுகாதார அட்டைகளை விநியோகித்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், சிஏபிஎஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் என்எஸ்ஜி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் பேர் ‘ஆயுஷ்மான் பாரத்: பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா’ (ஏபி பி.எம்-ஜெய்) திட்டத்தின் கீழ் வருவார்கள்.

அமித் ஷா, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மத்திய உள்துறை அமைச்சர் இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரின் முன்னிலையில் தேசிய சுகாதார ஆணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று குவஹாத்தியில் கையெழுத்தானது.

Views: - 0

0

0