வரலற்று சம்பவம்.. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம்? 141 எம்பிக்கள் இதுவரை சஸ்பெண்ட்.. ஒரே ஒரு வீடியோதான் காரணமா?

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 8:22 pm
MPs
Quick Share

வரலற்று சம்பவம்.. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம்? 141 எம்பிக்கள் இதுவரை சஸ்பெண்ட்.. ஒரே ஒரு வீடியோதான் காரணமா?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால், திங்கள்கிழமை மட்டும் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கடந்த 14-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத் தொடரில் இத்தனை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது வரலாற்றுச் சம்பவமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற வாசலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோவை, பாஜக தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, விளக்கம் அளித்துள்ளது.

அதில், “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று நாடே யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான காரணம் இதுதான். குடியரசு துணைத் தலைவரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கேலி செய்கிறார், அதை ராகுல் காந்தி உற்சாகப்படுத்துகிறார். இதன்மூலம் இவர்கள் சபையில் எவ்வளவு பொறுப்பற்றவர்களாகவும், அத்துமீறுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.

Views: - 269

1

0