மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை..! அசாம் பாஜக அமைச்சர் அதிரடி..!

Author: Sekar
12 October 2020, 12:10 pm
Assam_BJP_Sarma_UpdateNews360
Quick Share

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசு லவ் ஜிஹாத்க்கு எதிராக இன்னும் கடுமையான போராட்டத்தை நடத்தும் என்று பாஜக மூத்த தலைவரும் அசாம் அமைச்சருமான ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்தார். 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.

பெருகி வரும் அஜ்மலின் இராணுவம் எனும் கலாச்சாரத்தால் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் அசாமிய மக்கள் ஐந்து தொகுதிகளை இழந்து வருவதாக வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் தொடர்பாளர் சர்மா கூறினார்.

“நாங்கள் அசாமின் மண்ணில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக புதிய மற்றும் கடுமையான போராட்டத்தை தொடங்க வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு ஆணும் தனது மத அடையாளத்தை மறைத்து, அசாமிய மகள்கள் மற்றும் பெண்கள் மீது எதிர்மறையான செயல்களை மேற்கொண்டால், அவர் இரக்கமற்ற மற்றும் கடுமையான தண்டனையை அனுபவிப்பார் என்று நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.” என சர்மா கூறினார்.

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் தங்கள் மதத்தை மறைத்து வைத்திருப்பதால், பேஸ்புக்கில் அஜ்மலின் கலாச்சாரத்திற்கு பெண்கள் பலியாகி வருவதாக சர்மா கூறினார்.

“அஜ்மலின் இராணுவம் எங்கள் பெண்களைத் தொட்டால், அவர்களுக்கு ஒரே தண்டனை மரண தண்டனையாகும். அதற்கு குறைவான எந்த தண்டனையும் அவர்களுக்கு கிடையாது என நாங்கள் சத்தியம் செய்துள்ளோம். அத்தகைய தீர்மானத்துடன் நாங்கள் செயல்படுகிறோம்.” என்று அவர் கூறினார்.

“லவ் ஜிஹாத் அசாமிய மகள்களுக்கு ஒரு மலை போன்ற பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் போலி பெயர்களால் ஏமாற்றப்பட்ட பின்னர் பல பெண்கள் தலாக் சூழ்நிலைகளை எதிர்கொண்டனர்.

எந்தவொரு கலாச்சாரமும் நாகரிகமும் அஸ்ஸாமிய மகள்களைத் தாக்கும் போதெல்லாம், இரக்கமற்ற பதில்கள் வழங்கப்படும் என்று பாஜக தீர்மானித்துள்ளது” என்று அவர் கூறினார்.

சிலரின் சதி காரணமாக பாஜக ஐந்து தொகுதிகளில் அரசியல் அதிகாரத்தை இழந்துள்ளது என்றார் சர்மா.

“மக்கள் ஒன்றுபடாவிட்டால் சமூகம் காப்பாற்றப்படாது. அதனால்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை காப்பாற்றுவதற்காகவே நடக்கிறது என்பதை உணர வேண்டும்.” என அவர் மேலும் கூறினார்.

Views: - 47

0

0