சிக்காமல் ஏடிஎம்-ஐ உடைத்து பணம் திருடுவது எப்படி..? 3 மாதம் கோச்சிங் கிளாஸ் எடுத்த ‘ATM பாபா’… அதிர்ந்து போன போலீசார்!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 8:03 pm
Quick Share

போலீசாரிடம் சிக்காமல் ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிப்பது குறித்து 3 மாத பயிற்சி வகுப்பு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பைபை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதில்இருந்த ரூ.39 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு, விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக இளைஞர்கள் 3 மாத பயிற்சி சென்ற சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாகவும், வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. இதனால் அவரரை ஏ.டி.எம். பாபா என்றும் அழைத்து வந்துள்ளனர்.

ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க தேர்ச்சி பெற்றவர்களாக கருதி, திருடுவதற்கு அனுப்புகின்றனர்.

தமிழகத்தில் ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில், இதற்கென தனி பயிற்சியே பீகாரில் அளிக்கப்பட்டு வந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 391

0

0