வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு..! ஜொலிக்கும் அயோத்தி..! ராமர் கோவில் பூமி பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளும் ரெடி..!

4 August 2020, 9:06 pm
ayodhya_4_updatenews360
Quick Share

நாளை ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமர் கோவிலின் பிரமாண்ட பூமி பூஜைக்கான சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை தீபாவளிக்கு குறைவில்லாத வகையில் அயோத்தியில் ஏற்பாடுகள் களைகட்டி உள்ளது. நகரம், சாலைகள், கட்டிடங்கள், வரலாற்று தளங்கள் அனைத்தும் ஒளிரும் நிலையில், பிரதமரை வரவேற்பதற்கும், ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு சாட்சியாகவும் அயோத்தி எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

இந்த விழாவிற்கு சுமார் 200 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவிலுக்கான போராட்டத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்களின் நினைவாக மண் விளக்குகள் ஏற்றி, கோவில்களை அலங்கரிக்கவும், ராமாயணத்தை ஓதவும் மக்களை கேட்டுக்கொண்டார்.

கணேஷ் பிரபுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகளை நேற்று பன்னிரெண்டு புரோகிதர்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராமர் மற்றும் சீதைக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இன்று, அயோத்தியின் ஹனுமன்கர் கோயிலில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

பிரதான விழாவிற்கு அழைக்கப்பட்ட 175 பேரில், பல ஆன்மீக மரபுகளைச் சேர்ந்த 135 சாதுக்கள் உள்ளனர் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது தொடர்ச்சியான ட்வீட்டுகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் கூறியுள்ளது.

விழா மதியம் 2 மணி வரை நடைபெறும். கோவிலின் கல்வெட்டும் திறந்து வைக்கப்படும் என்றார். கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அற்புதமான விழாவிற்கு விருந்தினர்களை அழைக்கும் போது பல விஷயங்கள் கவனிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.