14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு திருமணம்..! குர்ஆன் படிக்கவும் நமாஸ் செய்யவும் வற்புறுத்தல்..!
17 November 2020, 4:25 pmமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 14 வயது இந்து சிறுமி ஒரு மாதத்திற்கு முன்பு தன்னை விட வயதில் மிகவும் மூத்த முஸ்லீம் ஆணால் கடத்தப்பட்டு இந்த வாரம் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டார். அந்த நபர் சிறுமியை கடத்தி தனிமையில் அடைத்து வைத்திருந்தபோது நமாஸ் செய்யும்படியும் குர்ஆனைப் படிக்கும்படியும் கட்டாயப்படுத்தியதை, சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சிறுமியின் மீட்புக்கு உதவிய ஒரு அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த நபர் சிறுமிக்கும் ஆலோசகருக்கும் இடையிலான உரையாடலின் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது. சோஹிதுல் ரஹ்மான் என்ற நபர் தன்னை நமாஸைப் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அரபியில் குர்ஆனிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை ஓத வற்புறுத்தியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார்.
முறையாக ஒரு நிக்கா விழா நடத்த அவர்கள் ஒரு மசூதிக்குச் செல்லவில்லை என்றாலும், ரஹ்மான் ஒரு மனிதனை வீட்டிற்கு அழைத்து, அவர் முன்னிலையில், நிகாஹ்னாமாவைப் படித்து, அதைச் செய்யும்படி செய்தார் என்றும் அவர் கூறுகிறார். இனிமேல் அவர் தனது கணவர் என்றும், அவருடன் உடல் உறவில் ஈடுபட ரெஹ்மான் வற்புறுத்தியதாகவும் அந்த சிறுமி கூறினார்.
சிறுமி மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹமீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 6’ஆம் தேதி அவர் காணாமல் போன பிறகு, மறுநாள் ஜிபந்தலா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
புது டெல்லியைச் சேர்ந்த மிஷன் முக்தி அறக்கட்டளை என்ற அமைப்பு அக்டோபர் 11 அன்று இந்த வழக்கை அறிந்து, வங்காள காவல்துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்தது.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் வீரேந்திர குமார் சிங் இந்த நிருபரிடம், அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை மூன்று நாட்களுக்கு காவல்துறையினர் ரஹ்மானின் அழைப்பு விவரம் பதிவை வாங்கி தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதாக தெரிவித்தனர். அக்டோபர் 8’ஆம் தேதி ரஹ்மான் பீகாரிலும், மறுநாள் ராஜஸ்தானிலும், மறுநாள் குஜராத்திலும் இருந்ததாக தரவு காட்டுகிறது.
இருப்பினும், இந்த விவரங்கள் பெரிதும் உதவவில்லை.
“எங்களிடம் டவர் தொடர்பான தகவல்கள் இல்லை. கூடுதலாக, நாட்கள் கடந்துவிட்டன. ரஹ்மான் வேறு மாநிலத்திற்கு மாறிவிட்டார் என்று நாங்கள் அஞ்சினோம்.” என என்ஜிஓவின் சிங் எனும் நபர் தெரிவித்தார். என்.ஜி.ஓ பின்னர் புதுடெல்லியை தளமாகக் கொண்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) அல்லது குழந்தை ஆணையத்தின் தலையீட்டைக் கோரியது.
இந்த வழக்கு இறுதியில் மேற்கு வங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டது.
நவம்பர் 11 அன்று தான், ரஹ்மானின் தற்போதைய இருப்பிடத்தைப் பெற்ற பிறகு, வங்காளத்தைச் சேர்ந்த போலீஸ் குழு, சிறுமியை மீட்பதற்காக குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்திற்கு புறப்பட்டது. “நானும் அதே நாளில் புதுடெல்லியில் இருந்து ராஜ்கோட்டுக்கு புறப்பட்டேன். இதற்கிடையில், மீட்பு நடவடிக்கையில் ஒத்துழைக்குமாறு குழந்தை ஆணையம் ராஜ்கோட் போலீசாருக்கு அறிவுறுத்தியது.” என சிங் தெரிவித்தார்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நவம்பர் 12’ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள ஜெட்பூரிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார். ட்விட்டரில் ஒரு பதிவில், என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ மீட்பு நடவடிக்கையில் தனது பங்கை லக்ஷ்மி பூஜையுடன் ஒப்பிட்டார்.
கடத்தலில் ஈடுபட்ட ரஹ்மான் 28 வயதானவர் மற்றும் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். அவர் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை நவம்பர் 13’ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் நலக் குழு முன் அழைத்து வந்தனர். என்.சி.பி.சி.ஆரைச் சேர்ந்த ஒரு அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாமல், ரஹ்மான் ஏற்கனவே திருமணமாகி, வங்காளத்தில் ஒரு மனைவி இருப்பதாகக் கூறியதாகவும், சிறுமி தனது பெற்றோரிடம் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். சிறுமி தொடர்ந்து வங்காள காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் தனது பெற்றோரிடம் திரும்ப வாய்ப்புள்ளது என்று சிங் கூறினார்.