பெங்களூரூ குண்டுவெடிப்பு… முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது ; என்ஐஏ அதிரடி..!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 12:15 pm
Quick Share

பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: திமுக – பாஜகவினரிடையே மோதல்… கோவையில் பிரச்சாரத்தின் போது பரபரப்பு…!!!

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இதனிடையே, மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டன.

இந்த நிலையில், பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: அண்ணாமலை நாக்கை வெட்டணும்.. பாஜகவில் திருட்டு மொல்லமாரி பசங்கதான் இருக்காங்க.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வந்த இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுவதற்கு முன்பு சென்னையில் ஒரு மாத காலம் தங்கி இருந்ததாகவும், குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட பிறகு, மீண்டும் தமிழகம், ஆந்திரா வழியாக அவர்கள் தப்பிச் சென்றதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

Views: - 266

0

0