ஆரம்பமே சர்ச்சை..! பதவிப் பிரமாணத்தில் ஹிந்துஸ்தான் என்பதை கூற எதிர்ப்புத் தெரிவித்த ஒவைசி கட்சி எம்எல்ஏ..!

23 November 2020, 5:39 pm
AIMIM_Aktharul_Iman
Quick Share

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஐஎம்ஐஎம் எம்.எல்.ஏ. அக்தருல் இமான் பதவியேற்பின் போது, இந்துஸ்தான் என்ற வார்த்தையை கூற எதிர்ப்புத் தெரிவித்தார்.

சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது இந்துஸ்தான் என்ற வார்த்தையை பாரத் என்று மாற்ற தற்காலிக சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சியின் அனுமதி கோரினார்.

இமான் உருது மொழியில் பதவியேற்றார். அவரது பதவிப் பிரமாணத்தில், இந்துஸ்தான் என்ற வார்த்தை இருந்த நிலையில், அதற்கு இமான் ஆட்சேபம் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் படி, உருது மொழியில் சத்திய பிரமாணம் செய்பவர்கள் இந்துஸ்தான் என்று கூற வேண்டும் என விதியிருப்பதை சுட்டிக்காட்டிய ஜித்தன் ராம் மஞ்சி, எனினும் அவரை பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதியளித்துள்ளார்.

“நான் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை. அரசியலமைப்பின் முன்னுரையை எந்த மொழியில் படித்தாலும், அது பாரத் என்ற வார்த்தையை குறிப்பிடுகிறது என்பதை நான் முன்வைத்தேன்.

இந்த உண்மையின் அடிப்படையில் நாங்கள் பாரத் எனக் கூறி சத்தியம் செய்கிறோம். அரசியலமைப்பைப் பொறுத்தவரை, அதே வார்த்தையை நம் நாட்டின் பெயராகப் பயன்படுத்தினால் அது சரியானதாக இருக்கும்.” என்று அவர் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், பாஜக தலைவரும் அமைச்சருமான பிரமோத் குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்சித்ததோடு, இந்துஸ்தான் பிரச்சினை உள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

Views: - 20

0

0