முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல் : 13 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 9:55 pm

பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

காயா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரப்பர் அணை திட்டப்பணிகள் குறித்தும், அப்பகுதியில் நிலவும் வறட்சி தொடர்பாக ஆய்வு செய்ய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டிருந்தார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக, நேற்றைய தினமே, பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.

தலைநகர் பாட்னாவில் இருந்து காயா நோக்கி வந்த வாகனங்கள் மீது இந்த கல்லெறி தாக்குதல் நடந்துள்ளது.இரண்டு கார்களை பெரிய கற்களை கொண்டும், கம்புகளை வைத்து அந்த கும்பல் உடைத்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி 13 பேரை பீகார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?