ஆட்டோ மொபைல் துறை சரிஞ்சு போச்சா? அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்..? தினுசாக பேசி திகைத்த வைத்த பாஜக எம்பி

5 December 2019, 8:18 pm
Quick Share

டெல்லி: ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி என்றால் ஏன் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது என்று ஒரு தினுசாகி பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாஜக எம்பி ஒருவர்.

அவர் பெயர் விரேந்திர சிங் மஸ்த். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாலியா தொகுதியை சேர்ந்தவர். மக்களவையில் அவர் பேச்சு தான் இன்றைய நாடாளுமன்றத்தின் ஹைலைட்.

அவர் பேசியது இதுதான்: நாட்டின் பெயரை கெடுக்கவும், மத்திய அரசின் புகழை சீர்குலைக்கவும் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி அடைந்து விட்டது என்று மக்கள் கூறுகின்றனர்.

அப்படி ஆட்டோ மொபைல் துறை சரிந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும், பின் ஏன் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது என்று பேசியிருக்கிறார்.

ஆட்டோமொபைல் துறைக்கும், டிராபிக் ஜாமுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் குழம்பி கிடக்கின்றனர். ஒரு தினுசாக இருந்த அவரது பேச்சுக்கு என்ன பொருள் என்று ஒரு சிலர் ஆராய்ச்சியை தொடங்கி இருக்கின்றனர்.