நீதி வென்றது..! கங்கனா ரனவத் கட்டிட இடிப்பு வழக்கில் மும்பை மாநகராட்சிக்கு எதிராக தீர்ப்பு..!

27 November 2020, 1:28 pm
Kangana_BMC_Issue_UpdateNews360
Quick Share

மும்பை மாநகராட்சி அத்துமீறி மேற்கொண்ட கட்டிட இடிப்பு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்துக்கு இறுதியாக மும்பை உயர்நீதிமன்றம் மூலம் கிடைத்துள்ளது.

செப்டம்பர் 7 மற்றும் 9’ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட கங்கனா ரனவத்துக்கு எதிரான மும்பை மாநகராட்சியின் நோட்டீஸ்களை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இடிப்பதால் ஏற்படும் சேதங்களை அறிய மதிப்பீட்டாளர் நியமிக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மதிப்பீட்டாளர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பார். அதன் பின்னர் அது கங்கனா ரனவத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்கும். சமூக ஊடகங்களிலும் மற்றவர்களிடமும் கருத்து தெரிவிக்கும் போது கட்டுப்பாட்டைக் காட்டும்படி நீதிமன்றம் நடிகையைக் கேட்டுக்கொள்கிறது.” என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த கங்கனா ரனவத் இந்த போரின் போது தன்னை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் மேலும், “தனிநபர் அரசாங்கத்திற்கு எதிராக நின்று வெற்றி பெறும்போது, ​​அது தனிநபரின் வெற்றி அல்ல. ஆனால் அது ஜனநாயகத்தின் வெற்றி. எனது உடைந்த கனவுகளை பார்த்து சிரித்தவர்களுக்கு எதிராக தைரியத்தையும் நன்றியையும் அளித்த அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் எஸ்.ஜே.கதவல்லா மற்றும் ஆர்.ஐ.சாக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், குடிமை அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை அங்கீகரிக்கப்படாதது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டது. 

கங்கனா ரனவத்துக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில், மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சியின் தலையீடு அதிகம் எனக் கூறப்படும் நிலையில், இந்த தீர்ப்பு, ஒரு வருட ஆட்சி நிறைவைக் கொண்டாடும் சிவசேனாவுக்கு ஒரு கறுப்பு அடையாளமாக மாறியுள்ளது எனக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0