கூட்டம் அதிகமா இருக்கு சமாளிக்க முடியல… திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் : தரிசனம் செய்ய 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 10:38 am
Tirupati Geavy Crowd - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி மலையில் பக்தர்கள்.
கூட்டம் கூடியதால் 48 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை , வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் காரணமாக திருப்பதி மலையில் ஏழுமலையானை தரிசிக்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளும் நிரம்பி வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு 4500 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வசதியை ஏற்படுத்தித்தர முடியும் என்று தெரிவித்துள்ள தேவஸ்தான நிர்வாகம் தற்போது தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவ நாட்களில் முக்கிய வாகன சேவையாக கருதப்படும் கருட சேவை அன்று குவியும் பக்தர்களை விட தற்போது அதிகப்படியான பக்தர்கள் திருப்பதி மலையில் சுவாமி தரிசனத்திற்காக குவிந்துள்ளதால் தற்போதைய திருப்பதி பயணத்தை பக்தர்கள் மற்றும் வி.ஐ.பிக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து லட்டு பிரசாத உற்பத்தி குறைபாடு காரணமாக பக்தர் ஒருவருக்கு தலா இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படுகிறது.

தங்கும் விடுதிகள் பெற , தலைமுடி காணிக்கை அளிக்க மற்றும் இலவச அன்னதான கூடத்தில் உணவு சாப்பிட என திருப்பதி மலையில் பல பகுதிகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது .

Views: - 635

0

0