நிதி நிறுவனத்தில் பெண் அலுவலரை கட்டிப்போட்டு ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை : சிசிடிவி காட்சி மூலம் 3 பேருக்கு போலீசார் வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 9:17 pm
Robbery - Updatenews360
Quick Share

ஆந்திரா : வங்கி ஊழியர்களை மிரட்டி வங்கியில் இருந்த ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காளாஸ்திரி பகுதியில் இயங்கி வரும் (fincare) தனியார் வங்கியில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வங்கியில் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் முகமூடி அணிந்து வங்கிக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் வங்கி கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களை ஆயுதங்கள் காட்டி மிரட்டி வங்கி லாக்கரை திறந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

கொள்ளை சம்பவத்தை அடுத்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர்.

இது குறித்த வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து காளாஸ்திரி ஒன் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து வங்கிக் கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்று திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். இரவு 11 வரை வங்கி ஊழியர்கள் வங்கியில் இருந்தது மற்றும் பாதுகாப்பு பணி ஊழியர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொள்ளையர்கள் திருடி சென்றதை முன்னிட்டு அருகில் இருக்கும் மற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

Views: - 546

0

0