கண்டெய்னர் லாரியின் பின்புறம் வேகமாக மோதிய கார் : 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 6:51 pm
Car Clash Dead- Updatenews360
Quick Share

ஆந்திரா : நெல்லூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியை சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் ஐந்து பேர் நெல்லூர் மாவட்டம் உலவபாடுவில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் இன்று மாலை ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காவலி தேசிய நெடுஞ்சாலையில் மைக்கப்பட்டுள்ள பாலம் மீது அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களது கார் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது.

விபத்தில் காரின் மேல் பகுதி தனியாக கழன்று கொண்ட நிலையில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.
மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த காவலி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணம் அடைந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி காவலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

Views: - 213

0

0