லாலு பிரசாத் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு வழக்கு…4 இடங்களில் அதிரடி ரெய்டு..!!
Author: Rajesh20 மே 2022, 10:17 காலை
பாட்னா: பீகாரில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Views: - 727
0
0