பணமோசடி வழக்கில் சிக்கிய டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் வந்த சோதனை: வீடு, அலுவலங்களில் சிபிஐ ‘ரெய்டு’

Author: Aarthi
5 October 2020, 11:27 am
tk sivakumar - updatenews360
Quick Share

பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பணமோசடி வழக்கில் சிக்கிய டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் வந்த சோதனை: வீடு, அலுவலங்களில் சிபிஐ ‘ரெய்டு’

ஊழல் வழக்கு தொடர்பாக பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் மாநில அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த வருடம் டெல்லியில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு எனச் சுமார் 84 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.8.59 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். சம்மனை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், விசாரணைக்கு பிறகு டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சிபிஐ அதிகாரிகளின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவில் 9 இடங்களிலும், டெல்லியில் 4 இடங்களிலும், மும்பையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 52

0

0