ஹத்ராஸில் களமிறங்கியது சிபிஐ..! விசாரணையில் திருப்பங்கள் நிகழுமா..?

Author: Sekar
13 October 2020, 12:51 pm
CBI_Hathras_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது தலித் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் தாக்கியதாக சம்பவம் நடந்த இடத்தை மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) குழு இன்று அடைந்தது. 

சிபிஐ அதிகாரிகளுடன், பாதிக்கப்பட்டவரின் சகோதரரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிபிஐ குழுவின் வருகைக்கு முன்னதாக, சம்பவ இடத்தில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர் மற்றும் முழு பகுதியும் வெளியாட்கள் யாரும் நுழையாத வகையில் சுற்றி வளைக்கப்பட்டன.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் உள்ளார் என்று ஹத்ராஸ் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

ஹத்ராஸ் தலைமை மருத்துவ அதிகாரி பிரிஜேஷ் ரத்தோர் கூறுகையில், “ஹத்ராஸ் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் தந்தை நலமாக இல்லை. அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு குழுவை நாங்கள் அனுப்பியிருந்தோம். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல தயாராக இல்லை.” எனக் கூறினார்.

முன்னதாக அக்டோபர் 10 அன்று, 19 வயது தலித் இளம் பெண்ணின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்குமாறு சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. சிபிஐ இந்த வழக்கை அக்டோபர் 11’ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0