மத்திய அரசிடமிருந்து டெல்லிக்கு 750 ஐசியு படுக்கை வசதிகள்..! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!

15 November 2020, 8:44 pm
arvind_kejriwal_updatenews360
Quick Share

டெல்லியில் உள்ள கொரோனா நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 750 ஐசியு படுக்கை வசதி கொண்ட வசதிகளை டிஆர்டிஓ மையத்தில் இருந்து வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தினமும் நடத்தப்படும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு மேல் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக முதல்வர் கூறினார்.

டெல்லி மருத்துவமனைகளில் ஐ.சி.யு படுக்கைகள் குறைந்து கொண்டிருந்த நிலையில் டெல்லி அரசுக்கு மத்திய அரசின் உதவி ஒரு பெரிய நிவாரணமாக வருகிறது. “அக்டோபர் 20 முதல், டெல்லியில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. போதுமான அளவு படுக்கைகள் சாதாரண கொரோனா நோயாளிகளுக்கு உள்ளன. ஆனால் ஐசியு படுக்கைகள் தீர்ந்து போகின்றன” என்று டெல்லி முதல்வர் கூறினார்.

இது தவிர, டெல்லி அரசு மருத்துவமனைகளில் ஐ.சி.யு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பைபாப் இயந்திரங்களைப் பெறுவதில் டெல்லி அரசுக்கு மத்திய அரசு உதவுவதாக உறுதியளித்துள்ளது.

மாலை 5 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற டெல்லியின் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடந்த சில மாதங்களில் இரண்டு முறை சந்தித்து டெல்லியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 22

0

0

1 thought on “மத்திய அரசிடமிருந்து டெல்லிக்கு 750 ஐசியு படுக்கை வசதிகள்..! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!

Comments are closed.