சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : 10ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்..!
7 August 2020, 6:33 pmசென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். சுமார் 2,300 கி.மீ. நீர்மூழ்கி கடல்வழியே கொண்டு செல்லப்படும் இந்தக் கடல்வழி கண்ணாடி இழை திட்டம், மொத்தம் ரூ.1,224 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி வரும் 10ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நிகராக அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும்.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நிகராக அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான தொலைதொடர்பு சேவைகளை வழங்க முடியும். மேலும், இந்த இணைப்பின் மூலம், தற்போதையதை விட 4 மடங்குகள் அதிகமாக, அதாவது, வினாடிக்கு 400 ஜிபி வரையிலான தரவு வேகத்தை பெற முடியும்.