யாருக்குமே இந்த நிலைமை வரக்கூடாது… இறந்த மகளின் உடலுடன் 10 கி.மீ. நடந்தே சென்ற தந்தை : வைரலான வீடியோ… விசாரணைக்கு உத்தரவு

Author: Babu Lakshmanan
26 March 2022, 1:30 pm

இறந்த மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு சிறுமியின் தந்தை 10 கி.மீ. நடந்தே சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர் தாஸ். இவருக்கு 7 வயதான சுரேகா என்ற மகள் இருந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக சுரேகா தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை நேற்று லகன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, உடலில் ஆக்ஸிஜன் அளவும் மிக குறைவானதாக இருந்தது.

சிறுமிக்கு போதுமான சிகிச்சை அளித்தும், அவர் காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த மருத்துவர்கள், உடலை ஏற்றி செல்லும் வாகனம், 9:20 மணிக்கு வரும் என தெரிவித்தனர்.

Courtesy

ஆனால், மகளின் இறப்பை தாங்க முடியாத ஐஸ்வர் தாஸ், மகளின் உடலை தோளில் போட்டு, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்தவாறே கொண்டு சென்றார். இதனை சாலையில் கண்ட சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ மாநில சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தியோவின் கவனத்திற்கும் சென்றது. இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 1569

    0

    0