திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி: தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு..!!

11 June 2021, 11:18 am
Quick Share

திருப்பதி: திருப்பதி கோவிலில் ஏழுமலையானை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்துடன் வழிபட்டார்.

சாமி தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்த இந்திய தலைமை நீதிபதி ரமணா இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மலையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியவர்கள் இன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாரங்கள் மற்றும் ஏழுமலையான் படம் பரிசாக வழங்கப்பட்டன.

Views: - 126

0

0