முதலமைச்சரின் கான்வாய் சோதனை ஓட்டம் : கோவிலுக்கு சென்ற பக்தரின் காரை எடுத்து சென்ற ஆர்டிஓ.. நடுவழியில் அலைக்கழிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 2:32 pm
Andhra CM Convoy Issue -Updatenews360
Quick Share

ஆந்திர முதல்வரின் கான்வாய் சோதனை ஓட்டத்திற்காக திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த பத்கரின் காரை பறித்து சென்ற சாலை போக்குவரத்து துறையினர்.

ஆந்திர மாநிலம் பல்நாடு வினுகொண்ட பகுதியை சேர்ந்தவர் வேமுல ஸ்ரீநிவாஸ். திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று வாடகை கார் ஒன்றில் ஊரிலிருந்து புறப்பட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்.

அவர்கள் சென்ற கார் ஓங்கோல் நகரை அடைந்த நிலையில் இரவு உணவுக்காக ஓட்டலில் நிறுத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த ஆர்டிஓ அலுவலக ஊழியர் ஒருவர் நான் ஆர்டிஓ அலுவலகம் ஊழியர் என்று கூறி டிரைவருடன் காரை எடுத்துச் சென்றார்.

பின்னர் இரவு 10 மணியளவில் அங்கு வந்த அந்த ஆர்டிஓ அலுவலக ஊழியர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

கான்வாய் சோதனை ஓட்டத்தை போலீசார் நடத்துகின்றனர். சோதனை ஓட்ட பயன்பாட்டிற்காக இந்த காரை எடுத்து சென்றதாக கூறியுள்ளார்.

இதனால் நடுவழியில் இறக்கி விடப்பட்ட வேமுல ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினர் வேறு வழியில்லாமல் பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்தனர். இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் மற்றொரு கார் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 589

0

0