அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் : 24 மணி நேரத்தில் கடத்தல்காரி கைது.. ஆந்திர போலீசார் அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 1:26 pm
Child Kidnap and Rescue -Updatenews360
Quick Share

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தையை திருடி சென்ற பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்ணம் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் இந்துஜா (வயது 29) என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இந்துஜாவிடம் வந்து நான் உண் கணவரின் உறவினர் என கூறி அறிமுகம் செய்து கொண்டார். மாலை வரை மருத்துவமனையை அந்த பெண் சுற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் இந்துஜா ஊசி போட்டு கொள்வதற்காக குழந்தையை அந்த பெண்ணிடம் விட்டு சென்றார். பிறகு திரும்பி வந்து பார்க்கையில் பெண் குழந்தையுடன் அந்த பெண் மாயமானார்.

இது தொடர்பாக இந்துஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 12 தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சி ஆதாரமாக அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பண்டுபள்ளி கிராமத்தில் அந்த குழந்தையுடன் சுற்றிய பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து குந்தையை மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கௌசில் ஒப்படைத்தார். ஆந்திர போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Views: - 133

0

0