கேரளாவில் விபத்துக்குள்ளான என்ஆர்ஐ தொழிலதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

11 April 2021, 12:55 pm
Chopper_Kerala_Accident
Quick Share

என்.ஆர்.ஐ தொழிலதிபர் எம் ஏ யூசுப் அலி உட்பட ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை கேரளாவில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் விபத்துக்குள்ளானது என்று போலீசார் கொச்சியில் தெரிவித்தனர்.

யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் அவரது லூலு குழுமத்தின் மூன்று ஊழியர்கள் மற்றும் லூலு குழுமத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பணியாளர்கள் உட்பட அனைத்து பயணிகளும் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், அவர்கள் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்” என்று அவர்கள் சிகிச்சை பெறும் லேக்ஷோர் மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இன்று காலை 8.30 மணியளவில் பனங்கட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அபுதாபியின் மிக உயரிய குடிமக்கள் விருதை அபுதாபி பட்டத்து இளவரசரிடமிருந்து லூலு குழுமத் தலைவர் யூசுப் அலி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 54

0

0