திரையரங்குகள் திறக்கப்படுமா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை!!
8 September 2020, 10:23 amநாடு முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள், நீச்சல்குளம், கேளிக்கை பூங்காக்கள் போன்றவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் திரைத்துறையினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்த திரையரங்குகள் திறக்க மத்திய அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் இன்று மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நடைபெறுகிறது. முதலில் நடந்த கூட்டத்தில் தென்னிந்திய திரையரங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய திரையரங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திரையரங்க திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஐந்தரை மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை திரைத்துறை சந்தித்துள்ளது நினைவுகூறத்தக்கது.
0
0