ஐஎஸ்ஐஎஸ் மாதிரி கம்யூனிஸ்ட்டு… இந்தியாவை விட்டு கம்யூனிஸ்ட் வெளியேறு : ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் எழுதிய வாசகங்களால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2022, 11:33 am
JNU - Updatenews360
Quick Share

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பிரதான வாயிலில் கம்யூனிச எதிர்ப்பு முழக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

“கம்யூனிஸ்டுகள் இந்தியாவை விட்டு வெளியேறுக”, “கம்யூனிஸ்டுகள் = ஐஎஸ்ஐஎஸ்”, மற்றும் “ஜிஹாதிகள் இந்தியாவை விட்டு வெளியேறுக” என கம்யூனிச எதிர்ப்பு வாசகங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.

முன்னதாக, பல்கலைக்கழக சுவர்களில் எழுந்த ஆட்சேபனைக்குரிய மற்றும் பிராமணர்களுக்கு எதிரான முழக்கங்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கண்டித்தது.

கம்யூனிஸ்டுகள் தான் பிராமணர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான முழக்கங்களை எழுதியுள்ளனர் என இந்து ரக்சா தள உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து இந்து ரக்சா தள உறுப்பினர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த செயலுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக(ஜேஎன்யு) துணைவேந்தர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை ஜேஎன்யு நிர்வாகம் விசாரித்து வருகிறது என்று தெரிவித்தது.

Views: - 128

0

0