மே 15 வரை முழு ஊரடங்கு..! அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி..! பீகார் அரசு அதிரடி அறிவிப்பு..!

4 May 2021, 12:19 pm
Bihar_Lockdown_UpdateNews360
Quick Share

மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் பீகார் அரசு மே 15 வரை முழுமையான ஊரடங்கை விதிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவ ஆரம்பித்த பிறகு, அக்டோபர், நவம்பருக்கு பின்னர் படிப்பபடியாக குறைந்து வந்தது. இது இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் அதிக அளவில் குறைந்தது.

எனினும், திடீர் எழுச்சியாக, மார்ச் மாதத்தில் ஆரம்பித்து, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சொர்ணா இரண்டாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியது. இது மிகக் குறுகிய காலத்தில் விஸ்வரூபமெடுத்து, இன்று தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை இந்தியா முழுவதும் பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக சில மாநிலங்களில் இருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பல மாநில அரசுகளும் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது பீகாரும் இணைந்துள்ளது.

முதல்வர் நிதீஷ்குமார் தனது ட்வீட் மூலம் மாநிலத்தில் முழுமையான ஊரடங்கை அறிவித்தார். “நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மே 15 வரை பீகாரில் ஊரடங்கை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது” என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், தடுப்பூசி மையங்கள், வங்கிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஊரடங்கு காலத்தில் செயல்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82 இறப்புகளையும், 11,407 புதிய பாதிப்புகளையும் பீகார் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை விதிக்க மத்திய அரசுக்கு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 76

0

0

Leave a Reply