டெல்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா!

14 August 2020, 6:36 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1192 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் டெல்லியில் மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் டெல்லியில் குணமடைந்தோர் எண்ணிக்கை 790 பேராக உள்ளது.

டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,108 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 11,366 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 10

0

0