கேரளாவில் இன்று புதிதாக 7,722 பேருக்கு கொரோனா: ஏறி, இறங்கும் கொரோனா பாதிப்பு

Author: kavin kumar
29 October 2021, 9:21 pm
Quick Share

கேரளாவில் இன்று 7,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துவந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் தினசரி கொரோனா பாசிட்டிவ் பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேல் கேரள மாநிலத்தில் பதிவானது. சில சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி கொரோனா பாதிப்பு கேரளத்தில் பதிவானது. கடந்த ஆகஸ்ட் மாதம் தினசரி புதிய கொரோனா பாதிப்பு 20,000க்கும் மேல் சென்றது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 30,000-தைக் கடந்து அச்சுறுத்தியது. இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல கட்ட முயற்சிகளை எடுத்தது. அதன் பயனாக கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அதன்படி கேரளா மாநிலத்தில் இன்று 7,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,54,063 லட்சமாக உயர்ந்துள்ளது.கேரளாவில் இன்று 86 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,156 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 6,648 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.கேரளாவில் தற்போது 78,722 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 48,43,576 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Views: - 332

0

0