மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று 9,246 பேருக்கு கொரோனா

Author: kavin kumar
14 October 2021, 10:07 pm
Cbe Corona -Updatenews360
Quick Share

கேரளாவில் இன்று புதிதாக 9,246 பேருக்கு கொரோனா தொற் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10 ஆம் தேதி, கேரளாவில் 10,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்பின்னர் கடந்த 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் 6,996 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12 ஆம் தேதி 7,823 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்தச்சூழலில் நேற்று கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 11,079 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இன்று 9,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48,29,944 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இன்று 96 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.இன்று 10,952 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 47,06,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 95,892 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Views: - 265

0

0