6 மாநிலங்களில் தீவிரம் காட்டும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்குமா மத்திய அரசு?..

17 March 2021, 1:44 pm
Corona_test_updatenews360
Quick Share

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பில் தமிழகம், கர்நாடகா, கேரளா,குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் 84 சதவீத பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் இறந்தவர்களில் 87% பேர் 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரலை தடுக்கும் விதமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Views: - 26

0

0