மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது..!!

1 March 2021, 11:47 am
senior vaccine - updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனைகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

Views: - 4

0

0