ஏன் ? எதற்காக என்கவுண்ட்டர் ? ஐதராபாத் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் விளக்கம் !

6 December 2019, 3:41 pm
Quick Share

பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, தற்போது அதுகுறித்து ஐதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அவர் கூறுகையில் பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்ததை கைதான 4 பேரும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பெண் மருத்துவரின் செல்போனை அங்குள்ள ஒரு புதருக்குள் ஒழித்து வைத்திருப்பதாக கூறினார். அதன் பேரில் அந்த செல்போனை அங்கிருந்து எடுக்கவே அவர்களை அங்கு அழைத்து சென்றோம். அப்போது அவர்களுக்கு விளங்கிடவில்லை. சமயம் பார்த்து கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் காவலர்களின் ஆயுதங்களை பறித்து தாக்க முயன்றனர். அப்போது சரணடையுமாறு அறிவுறுத்தியும் அவர் அதனை பொருட்படுத்தாது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தற்காப்பிற்காக தான் அந்த நால்வரையும் சுட்டுக்கொன்றோம். மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் .