ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்..! படைகளை பின்வாங்க சீனாவிடம் அறிவுறுத்தல்..!

5 September 2020, 9:05 am
rajnath_singh_Wei_moscow_meet_Updatenews360
Quick Share

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  மோதல் நடக்கும்  இடங்களிலும் பழைய நிலையை மீட்டெடுக்க வலியுறுத்தினார். மேலும் மாஸ்கோவில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் உடனான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பின் போது வீரர்களை விரைவாக பின்வாங்குமாறு அழைப்பு விடுத்தார்.

கடந்த மே மாதம் முதன் முதலாக லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் மோதல் உச்சகட்டமடைந்து வீரர்களின் உயிரிழப்புக்கும் வழிவகுத்தது.

சீனாவின் தொடர் அடாவடிக்கு எல்லையில் தக்க பதிலடி கொடுக்கும் அதே வேளையில், சீனாவுடனான பொருளாதார உறவுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நிறுவனங்களுக்கு பல்வேறு தடைகளை விதித்தது.
இது ஒருபுறம் நடக்க ராணுவம் மற்றும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் முடிவில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. எனினும் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் இதுவரை நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தனர்.

தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் எஸ்சிஓ ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் உள்ளார். அங்கு சீன பாதுகாப்பு அமைச்சரை பார்க்க நேர்ந்தாலும் தனிப்பட்ட சந்திப்பு எதற்கும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இந்தியா மட்டுமல்லாது தன்னுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள பெரும்பாலான நாடுகளுடன் பகையை வளர்த்துக்கொண்டுள்ள சீனா இறங்கி வந்து இந்திய பாதுகாப்பு அமைச்சரை நேரடியாக சந்திக்க நேரம் கேட்டு அணுகினார். இதையடுத்து இந்தியாவும் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்ததை ஒட்டி, சிங் மற்றும் வீ இடையேயான சந்திப்பு, மே மாதம் கிழக்கு லடாக்கில் மோதல் வெடித்ததிலிருந்து இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான முதல் உயர்மட்ட அரசியல் ரீதியிலான நேருக்கு நேர் சந்திப்பு ஆகும்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் பாங்கோங் ஏரியின் தென் கரையில் நிலையை மாற்ற சீன இராணுவம் மேற்கொண்ட புதிய முயற்சிகளை இந்திய தூதுக்குழு கடுமையாக எதிர்த்தது மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனாவை வலியுறுத்தியது என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவில், தற்போதைய பதற்றத்தின் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவிடம் உள்ளது என்று வீ சிங்கிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 6

0

0