ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 15 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பு

17 October 2020, 5:23 pm
Delhi High Court updatenews360
Quick Share

டெல்லி : ஐ.எஸ். பயங்கராவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் நாச வேலைகளை செய்ய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்காக, சமூக வலைதளங்களின் மூலம் இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து மூளைச் சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் வேலையை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கராவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கிரிமினல் சதி பிரிவுகளின் கீழ், தண்டனைகளை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நஃபீஸ் கானுக்கு ரூ.1,03,000 அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைத் தவிர 3 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும், மற்ற குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

Leave a Reply