செங்கோட்டை வன்முறைக்கு காரணமான தீப் சித்து குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு..! டெல்லி போலீஸ் அறிவிப்பு..!
3 February 2021, 12:42 pmகுடியரசு தினத்தன்று செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதோடு, தங்கள் மதக் கொடிகளை ஏற்றியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு டெல்லி காவல்துறை ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் தீப் சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங் மற்றும் குர்ஜாந்த் சிங் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் செங்கோட்டையில் மதக் கொடிகளை ஏற்றி அடாவடியில் ஈடுபட்ட நிலையில் தற்போது அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். இதில் தீப் சித்து எனும் நபர் தீவிர காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட மற்ற நான்கு நபர்களான ஜஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ 50 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்குவதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பின் போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் பங்கேற்ற குற்றவாளிகளைத் தேடுவதற்காக டெல்லி மற்றும் பஞ்சாபில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறைகள் தொடர்பாக இன்று வரை 44 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 122 பேர் காவலில் உள்ளனர்.
ஜனவரி 26 வன்முறை குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை இணை ஆணையர் பி.கே.சிங் மற்றும் மூன்று டி.சி.பி.க்கள் ஜாய் துருக்கி, பெஷாம் சிங் மற்றும் மோனிகா பரத்வாஜ் ஆகியோரின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0