கொடுத்த வரதட்சணை பத்தலையாம்… ரூ.5 லட்சம் கேட்டு டார்ச்சர் : இளம்பெண் மர்ம மரணம்…. கொலையா? தற்கொலையா? என விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 12:46 pm
Wife Suicide - Updatenews360
Quick Share

ஆந்திரா : வரதட்சனை கொடுமை காரணமாக மென் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை நாடகமாடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த பார்க்கவ், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலாவிற்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவி இருவரும் மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் பார்க்கவ் கூடுதல் வரதட்சணையாக ரூ 5 லட்சம் கேட்டு நிர்மலாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து நிர்மலாவின் பெற்றோர் ரூபாய் 2 லட்சத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் மீதமுள்ள 3 லட்ச ரூபாயை கொண்டு வர வேண்டுமென கொடுமைப்படுத்திய நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிர்மலா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்மலாவின் தந்தை லக்ஷ்மன் ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்மலாவை கொலைசெய்து தற்கொலை என கணவன் திசை திருப்புவதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Views: - 699

0

0