மாமியாருக்கு துபாயில் இருந்து வந்த வீடியோ கால்.. திடீரென மருமகன் செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 8:40 pm

மாமியாருக்கு துபாயில் இருந்து வீடியோ கால் பண்ணிய மருமகன் செய்த செயலால் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

கோனசீமா மாவட்டத்தில் உள்ள சகினேடி பள்ளியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) என்பவருக்கும், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோட்டப்பேட்டையைச் சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜானு (5), அனுஷா (3)ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13 மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார்.

கணவர் வெளிநாடு சென்று விட்டதால், தனது குழந்தைகளுடன் மானசா தாய் வீட்டில் தங்கி இருந்தார். ஜெகதீஷ் துபாயில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசி வந்தார்.

ஜெகதீஷ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால் மானசா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கு சென்றது முதல் மனைவி குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசி வந்தார். இதனிடையே, மானசா தனது குழந்தைகளுடன் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்தனர். மேலும், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வாரமாக மனைவி, குழந்தைகள் தன்னுடன் செல்போனில் பேசாததால் விரக்தியில் இருந்த ஜெகதீஷிடம், மனைவி மற்றும் குழந்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று மாமியார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாமியாருக்கு வீடியோ கால் செய்த ஜெகதீஷ், தனது மனைவி, குழந்தைகளுடன் வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக சந்தேகமடைந்து, வீடியோ காலில் இருந்த அவர் விரக்தியில் திடீரென அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அலறிய அவரது மாமியார், மருமகனின் விபரீத முடிவு குறித்து போலீசாருக்கும், ஜெகதீஷின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார்.

மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிற்கு சென்ற தனது மகன், அவர்களாலேயே தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!