11 மாநிலங்களவை இடங்களுக்கானத் தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு..!

Author: Sekar
13 October 2020, 1:13 pm
parliament_updatenews360
Quick Share

இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 9’ஆம் தேதி 11 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பியின் பதவிக்காலம் நவம்பர் 25’ஆம் தேதியுடன் காலாவதியாகவுள்ளதால் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரபால் சிங் யாதவ், ஜாவேத் அலி கான், அருண் சிங், நீரஜ் சேகர், பி.எல் புனியா, ஹர்தீப் சிங் பூரி, ரவி பிரகாஷ் வர்மா, ராஜாராம், ராம்கோபால் யாதவ், வீர் சிங் மற்றும் ராஜ் பப்பர் ஆகியோர் பதவிக்காலம் நிறைவடையும் எம்பிக்கள் ஆவர்.

வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

வேட்புமனுக்களை வழங்குவதற்கான கடைசி தேதி அக்டோபர் 27 உடன் முடிவடைய உள்ள நிலையில் 28’ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆராயப்படும். வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 2 ஆகும்.

Views: - 36

0

0